உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

டெங்கு நோய் பரவக்கூடிய வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்தும் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவிக்கிறது.

டெங்கு நோய் பரவக்கூடிய வகையில் சுற்றாடலை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் பிரசீலா சமரவீர தெரிவித்தார்.

இவ்வருடத்தில் இதுவரை 30 ஆயிரத்து 764 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது நிலவிவரும் மழைகொண்ட காலநிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சுகாதார அமைச்சு டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குதல், பொதுமக்களை தெளிவுபடுத்துதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்து டெங்கு நோய் பரவுவதை தடுக்கவேண்டியது கடமையென பிரசீலா சமரவீர தெரிவித்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டுமெனவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் பிரசீலா சமரவீர வலியுறுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க