இலங்கையின் புலனாய்வு சேவை மீண்டும் மீளமைக்கப்பட வேண்டும் என பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
இதற்காக புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டு தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் நசுக்கப்படும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதம மந்திரி குறிப்பிட்டிருக்கிறார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பிரதம மந்திரி இந்த கருத்தை தெரிவித்திருக்கின்றார்.
மாத்தறையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு தெரிவித்த கருத்தின் அடிப்படையில் ஐ எஸ்.ஐ எஸ். தீவிரவாதிகளின் நடவடிக்கை தொடர்பில் பல்வேறுமட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
எனவே புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அந்த சட்டங்களின் அடிப்படையில் இந்த பயங்கரவாதமும் தீவிரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டு இருக்கின்றார்.
2006 ஆம் ஆண்டு ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை காலத்தில் மாத்திரம் பிரித்தானியாவில் இந்த பயங்கரவாத சட்டம் 15 தடவைகள் மீள் அமைக்கப்பட்டதையும் இங்கு பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
எனவே இலங்கையும் அதனை பின்பற்ற தமக்கு ஏற்ற வகையில் இந்த சட்டத்தை புலனாய்வு சேவையை மாற்றியமைக்க வேண்டும் என பிரதம மந்திரி தெரிவித்திருக்கின்றார்.
கருத்து தெரிவிக்க