உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அணைத்து அரச நிறுவனம், திணைக்களங்களுக்கான செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற பாரிய செலவினங்களை கருத்தில் கொண்டு உடனடியாக அரச திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் தமக்கான செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அனைத்து அரசாங்க திணைக்களங்களுக்கும் கொடுத்து அவர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதன் அடிப்படையில் நீர், மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள் மற்றும் வெளிநாட்டு சேவைகள் பயிற்சிகள் போன்றவற்றிற்கு பொது நிதியை பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக அடுத்த வருடத்திற்கான நாட்காட்டி மற்றும் குறிப்பேடுகள் அதேபோல அன்பளிப்புகள் போன்றவற்றிற்கும் எவ்வித அரச நிதியையும் பயன்படுத்தவேண்டாமென இந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

குறித்த அறிவித்தலை திரை செய்திகளின் செயலாளர் ஆர். எச். சமரதுங்க அனைத்து கூட்டங்களுக்கும் அரசு திணைக்களங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் பாரிய செலவை கொண்டிருக்கின்றது எனவே அந்த சரிவினை எனவே அந்த சரிவில் இருந்து மீண்டு வருவதற்கு இவ்வாறான செலவின கட்டுப்பாடுகளை அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க