குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி தொடர்பிலான விசாரணைகளை குற்றப்பலனாய்வுப்பிரிவிலிருந்து மாற்றுவது பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என பதில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்கிரம ரட்ண தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்துள்ளார் என தெரிவித்து குற்றப்பலனாய்வுப் பிரிவினரால் வைத்தியர் சாபி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் .
இந்நிலையில் குறித்த விசாரணையினை விசேட குழுவொன்றிடமோ அல்லது விசேட விசாரணை பிரிவிடமோ ஒப்படைக்க முடியுமா என காவல் துறை ஆணையம் பதில் காவல்துறைமா அதிபரிடம் ஆலோசனை கோரி இருந்தது.
இந்நிலையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பதிலை தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அவர் முறையாக எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என காவல்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க