மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் 313ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது என கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி தெரிவித்தார்.
ஆசிரியர் பற்றாக்குறை சம்பந்தமாக வலயக்கல்வி பணிப்பாளரிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர் வினவிய அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
எமது கல்குடா கல்வி வலயத்தில் 313 ஆசிரியர்களுக்கு தற்போது வெற்றிடம் இருக்கின்றது. கணிதப்பாடத்துக்கு 77 ஆசிரியர்களும், விஞ்ஞானப்பாடத்துக்கு 53 ஆசிரியர்களும், ஆங்கிலப்பாடத்துக்கு 45 ஆசிரியர்களும், தகவல் தொழிநுட்ப பாடத்துக்கு 45 ஆசிரியர்கள் அடங்கலாக 25 மேற்பட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றனது.
எமது கல்வி வலயமானது கடந்த யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்.
இப்பிரதேசத்தில் முழுமையான கற்றல், கற்பித்தல் பணிகளை முன்னெடுத்து கல்குடா பிரதேசத்தின் கல்வியை மேம்படுத்துவதற்கு ஆசிரியர் பற்றாக்குறையை பொறுப்புவாய்ந்தவர்கள் தீர்த்துக்தர வேண்டும்.
குறிப்பாக தமிழ்மொழி மூலமான மாணவர்கள் ஆசிரியர் பற்றாக்குறையினால் பல சவால்களுக்கு மத்தியிலும், கற்றலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இவ்வருடம் தோற்றவுள்ள க.பொ.சாதாரணம், உயர்தரம் மாணவர்களின் நன்மைகருதி பொறுப்புவாய்ந்தவர்கள் கவனமெடுத்து கல்குடா கல்வி வலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துதரவேண்டுமென என அவர் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க