உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாளை சந்திரகிரகணம் – இலங்கை மக்களுக்கு தென்படும்

நாளை பௌர்ணமி தினத்தன்று சந்திரகிரகணம் தோன்றவுள்ளது.

சந்திரகிரகணம் பகுதியளவில் இலங்கை மக்களுக்கு தென்படுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளிலும் சந்திரகிரகணம் தென்படவுள்ளது.

இது இவ்வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணமாக அமையவுள்ளது.

2021 ஆண்டு மே மாதமே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படுமெனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

16ம் திகதி நள்ளிரவிற்கு பின்னர் 17ம் திகதி அதிகாலை 12.13க்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகவுள்ளது.

அதனை 17ம் திகதி அதிகாலை 5.47 வரை பகுதியளவில் இலங்கையர்களுக்கு பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க