அமெரிக்காவின் மில்லேனியம் சேலஞ்ச் கோப்ரேஷன் [ MCC ] தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் 22ஆம் தேதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என்றாலும் பல்வேறு தடைகள் தொடர்பில் அந்த நிதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை இந்த நிலையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் எதிர்வரும் 22ஆம் திகதி இந்த அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட இருக்கின்றது.
இதன் மூலம் இலங்கைக்கு 480 மில்லியன் டொலர்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பல்வேறு திட்டங்களுக்காக அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த நிதியுதவி பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க இருக்கின்றார். அன்றைய தினம் நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாட்டில் இல்லாத சூழ்நிலையிலே இந்த அமைச்சரவை பத்திரத்தை இரான் விக்ரமரட்ன சமர்ப்பிக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க