உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

ஏறாவூரில் வாகனத் தொழில்துறை சார் பயிற்சி நெறிகள்

இளைஞர் யுவதிகளுக்குத் தொழில் தகைமையுடன் கூடிய தொழில்வாய்ப்பை வழங்கும் வகையில் வாகனத் தொழில்துறை சார் பயிற்சி நெறிகள் (Automobile Motor Mechanical) ஏறாவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) ஏறாவூரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நைற்றாவின் தலைவர் நஸீர் அஹமட் பிரதம அத்pதியாகக் கலந்து கொண்டு வாகானத் தொழில்துறை சார் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து வைத்தார்.

இவ்வாண்டு முடிவடைவதற்குள் நைற்றா மூலமாக சுமார் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பு வழங்கும் தேசியத் திட்டத்தின் ஒரு படியாக இந்த பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய பயிலுனர், கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை புதிய தலைவர் செய்னுரலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இந்த பயிற்சி நிலையத்தின் ஊடாக முதற்கட்டமாக ஓட்டோ மொபைல், மோட்டார் மெக்கனிக்கல், முச்சக்கரவண்டி பழுதுபார்த்தல் ஆகிய 3 பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் பயிற்சிநெறிகளுக்கான உதவிப் பணிப்பாளர் நிலந்த டி சில்வா, தொழில்துறை உதவிப் பணிப்பாளர் எம். சாஜஹான், மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் சாலி மௌலானா, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. யூசுப், ஏறாவூர்பற்று பிரதேசசபை தவிசாளர் நாகமணி கதிரவேல், ஏறாவூர் நகரசபை பிரதி தவிசாளர் எம்.எல். ரெபுபாசம் உட்பட நகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், பயிலுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க