உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

15 மாவட்டங்களில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 600 பவுசர்கள் மற்றும் 11 ஆயிரம் நீர்த்தாங்கிகள் மூலம் குடி நீர் வழங்கப்படுவதாக தேசிய இடர் நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜா தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் 17 மாவட்டங்களில் சுமார் 120 000 குடும்பங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு எந்தவித குறைபாடுமின்றி குடிநீர் வினியோகிக்கப்படுவதாக அவர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் அரசாங்க அதிபார்களுக்கு 4 கோடி 50 இலட்ச ரூபா நிதி உதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வறட்சி நிலை தொடருமாயின் மேலும் நிவாரண உதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

இதன்கீழ் 15 ஆயிரம் லீற்றர் கொள்ளளவைக்கொண்ட புதிய பவுசர்கள் பயன்படுத்தப்படுமென்றும் தேசிய இடர் நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜா மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க