புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் சிறிலங்கா என்ரபிறைஸ் என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாவது கண்காட்சி இம் மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரையில் அநுராதபுரம் வலிசிங்ஹ அரிச்சந்திர விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலில் நிதி அமைச்சர் மங்களசமரவீரவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 10 இலட்சம் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டங்களுக்கும், 2025 ஆம் ஆண்டில் செல்வம் மிக்க நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்குள் வடமத்திய மாகாகணத்தவர்களை பெரும் எண்ணிக்கையில் ஒன்றியைத்துக்கொள்வதும், இந்த கண்காட்சியின் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு தேவையான அடிப்படை விடயங்கள் சிறிலங்கா என்ரபிறைஸ் என்ற தேசிய வேலைத்திட்டத்தில் சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ள வட்டி அற்ற கடன் உதவி குறித்து தெழிவுபடுத்தும் கடனை பெற்றுக்கொள்வதிலுள்ள தடைகளை அகற்றுவதற்கான நடமாடும் சேவையும் இதில் இடம்பெறவுள்ளது.
இதற்காக அரசாங்கம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகளின் முக்கியஸ்தகர்கள் மற்றும் அதிகாரமிக்க அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து பொது மக்களுக்கான சேவையை இதன் மூலம் வழங்குவர்.
கருத்து தெரிவிக்க