மட்டக்களப்பு மாவட்டம் நவகிரி நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட 37 ஆம் கிராமத்தின் 7 ஆம் வாய்க்கால் வயற்கண்டத்திற்குடப்பட்ட சுமார் நூறுற்கு மேற்பட்ட நெல்வயல்கள் நீரின்றிக் கருகிப்போயுள்ளதாகவும், இதற்கு நவகிரி நீர்ப்பாசனப் பிரிவு தமக்கு நீர் வழங்கவில்வையெனத் தெரிவித்தும் விவசாயிகள் இன்று மாலை அவர்களது நெல் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கமாக நவகிரிக் குழத்திலிருந்து நீர் தமது வேளாண்மைச் செய்கைக்கு வாரத்திற்கு ஒருமுறை நீர் திறந்து விடப்படுவது வழக்கம்
ஆனால் இம்முறை இரு வாரங்களுக்கு ஒருமுறை நீர் விடப்படுவதனால் தமது நெற்பயிர்கள் உரிய காலத்தில் நீரின்றி வெய்யிலில் கருகிப்போய் விட்டதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தாம் பரம்பரை பரம்பரையாக வேளண்மைச் செய்கையைத்தான் தமது ஜவனோபாயத் தொழிலாகச் செய்து வருகின்றோம்.
ஆனால் கடந்த மாரிப்போகச்செய்கையில் பூச்சித்; தாக்கங்களினால் தமது நெற்பயிர்கள் அழிந்து போயின
அதற்கும் எதுவித இழப்பீடுகளும் கிடைக்கவில்லை.
தற்போது நீரின்றி தமது வாழ்வாதார நெற்பயிர்ற்செய்கை கைவிடப்பட்டுள்ளது இதற்காவது அரசாங்கம் எமக்கு இழப்பீடுகளையாவது தந்துதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்து தெரிவிக்க