உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

கடந்த கால படிப்பினைகளைக் கொண்டு முடிவுகளை எடுப்போம்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் நாங்கள் கடந்த கால படிப்பினைகளைக் கொண்டு எவ்வாறான நிபந்தனைகளை கொடுக்க வேண்டும் என்பது தொடர்பில் நாங்கள் கூடி ஆராய்ந்து முடிவுகளை நாங்கள் எடுப்போம். என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் குறுமண்வெளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் ம.இளங்கோவினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட 29 இலட்சம் ரூபா நிதியில் வீதி, பொதுமைதான பார்வையாளர் அரங்கு, ஆலய சுற்றுமதில் போன்ற அபிவிருத்தி திட்டங்களை அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஞா.சிறிநேசன் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் இடம்பெற இருக்கின்றது.

அந்த இடத்தில் நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எவ்வாறான நிபந்தனைகளை நாங்கள் அரசுக்கு கொடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டி அதன்போது முடிவுகளை எடுத்து செயற்பட இருக்கின்றோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடந்த கால படிப்பினைகளைக் வைத்தக்கொண்டுதான் எங்களது முடிவுகள் அமையும் என்பதனை நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க