கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலிருந்து அத்துரலிய ரத்ன தேரர் இன்று (09) வெளிநடப்பு செய்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று முற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது அத்துரலிய ரதன தேரரால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் காரணமாகவே ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை வலுவிழந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்தகமே சுட்டிக்காட்டினார்.
இதனால் கடுப்பாகிய ரத்ன தேரர், பழைய விடயங்களை பற்றி கதைப்பதில் பயன் இல்லை. எனவே, அடுத்து என்னவென ஆராய்வோம் என கடுந்தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
பதிலுக்கு ஆனந்த அளுத்கமகேயும் கருத்து வெளியிட இருவருக்குமிடையிலான சொற்போர் உக்கரமடைந்துள்ளது.
இந்நிலையில் இருவரையும் அமைதி காக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கட்டளை பிறப்பித்தார். இதையடுத்து கூட்டத்திலிருந்து ரத்ன தேரர் வெளியேறினார் என தெரியவருகின்றது.
கருத்து தெரிவிக்க