உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

திருகோணமலை 5 மாணவர்கள் கொலை தீர்ப்பு- சர்வதேச அமைப்புகள் கண்டனம்

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 13 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன.

2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலையில் கொலைசெய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்கள் தொடர்பிலான வழக்கு அண்மையில் முடிவுக்கு வந்திருந்தது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 13 விசேட அதிரடிப்படையினர் விடுவிக்கப்பட்டனர்.

சாட்சியங்கள் எதுவும் அற்ற நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் இரண்டு குரல் கொடுத்துள்ளன.

மனித உரிமை கண்காணிப்பாகம் மற்றும் சர்வதேச மன்னிப்பு சபை ஆகியன இந்த தீர்ப்பை விமர்சித்துள்ளன.

இதன்படி இந்த 5 மாணவர்கள் கொலை செய்யப்பட்ட விடயத்தில் இலங்கையின் அதிகாரிகள் உரிய முறையில் நீதியை வழங்க தவறி விட்டதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய நிலை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்திருக்கின்றார்.

கடந்த 13 வருடங்களாக இடம்பெற்று வந்த வழக்கின் இறுதியாக இந்த சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது மிகவும் பாரதூரமான விடயம் என்ற விடயத்தை அவர் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் இந்த வழக்கில் 36 சாட்சியாளர்கள் அடங்கப்பட்டிருந்த போதும் அதில் 8 பேர் நீதி மன்றத்தில் முன்னிலையாகவில்லை அவர்கள் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் பெற்றிருப்பதால் அவர்கள் சாட்சியத்தை வழங்க கூடியதாக இருக்கவில்லை என்ற தகவலையும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை, சர்வதேச மன்னிப்பு சபையும் இவ்விவகாரம் தொடர்பில் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பு மிகவும் பாரதூரமானது மனித உரிமைகளை பாதுகாக்கும் விடயத்தில் இந்த தீர்ப்பு கவனிக்க கூடிய ஒன்று என்ற கருத்தையும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கின்றது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய நிலை பணிப்பாளர் விராஜ் பட்நாயக்க இது தொடர்பில் குறிப்பிடும் போது திருகோணமலை ஐந்து மாணவர்களின் கொலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தமது கடமையையும் நீதியையும் செயற்படுத்த தவறி இருக்கின்றது.

இதனை சர்வதேச நாடுகள் கவனித்துக் கொண்டிருக்கும் எனவே இந்த 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட யோசனைகள் விடயத்தில் முழுமையான நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் இலங்கை அதனை அர்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய நிலைய பணிப்பாளர் விராஜ் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க