உள்நாட்டு செய்திகள்புதியவை

செப்பு தொழிற்சாலை பணியாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுவெடிப்பாளர்களில் ஒருவருக்கு சொந்தமான செப்பு தொழிற்சாலையில் பணியாற்றும் கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவிற்கு ஜூலை 15 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின்போது, சந்தேக நபர் மீதான விசாரணைகள் தொடர்வதாக பயங்கரவாத விசாரணை பிரிவு, தலைமை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜூலை 15 ம் திகதி  மீண்டும் வழக்கு விசாரிக்கப்படும்போது விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தலைமை மஜிஸ்ட்ரேட் லங்கா ஜெயரத்ன குறித்தவிசாரணை பிரிவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

அண்மையில் நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்பின் பின் கைது செய்யப்பட்ட ஷங்ரி-லா தற்கொலை குண்டுதாரியான இல்ஹாம் இப்ராஹிமுக்கு சொந்தமான ஒரு செப்பு தொழிற்சாலையின் 10 ஊழியர்களில் அப்துல்லாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க