உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கடத்தப்பட்ட 11 பேரை விடுவிக்க கரணாகொட முயற்சிக்கவில்லை.

கொழும்பில் இருந்து 11 பேர் கடத்தப்பட்டு திருகோணமைலையில் தடுத்து வைக்கப்பட்ட விடயத்தை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொட அறிந்திருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது

குற்றப்புலனாய்வுத்துறையினர் இந்த தகவலை கொழும்பு நீதிமன்றில் வெளியிட்டுள்ளனர்.

எனினும் கடத்தப்பட்ட அந்த இளைஞர்களை விடுவிக்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றப்புலனாய்வுத்துறையினர் தமது பி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

2009ஆம் ஆண்டு மே 10ஆம் திகதி இந்த 11பேரும் கடத்தப்பட்ட பின்னர் திருகோணமலை கடற்படை தளத்தில் வைக்கப்பட்ட நிலையில் காணாமல் போனதாக முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை கொழும்பு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது

இவர்கள் கடத்தப்பட்டு திருகோணமலையில் வைக்கப்பட்டுள்ளi விடயத்தை கடற்படையின் அப்போதைய புலனாய்வு தலைவராக இருந்த அட்மிரல் ஏகே குருகே, காவல்துறையின் கொழும்பு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த அனர சேனாநாயகவுக்கு முறையிட்டிருந்தார் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்

கருத்து தெரிவிக்க