தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்கள் நலன்களில் அக்கறை கொள்ளவில்லை என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
2013ம் ஆண்டில் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்த போது எமது மக்களுக்கு சேவைகளை செய்ய எண்ணினேன்.
இதயசுத்தியுடன் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக எனது கடமைகளை நிறைவேற்றி முடிக்கலாமென்றும் எதிர்பார்த்திருந்தேன்.
எனினும் இந்த விஞ்ஞாபனங்கள், அறிக்கைகள் தேர்தல் காலத்தில் எமது மக்களை ஏமாற்றுவதற்காகத் தயாரிக்கப்படுகின்ற போலி ஆவணங்கள் என்று காலம் கடந்த பின்னரே புரிந்தது.
நாம் எந்தக் கட்சி சார்ந்து தேர்தலில் நின்றோமோ அந்தக் கட்சி கூட மக்கள் நலன்களில் அக்கறை கொள்ளாது அரசுக்கு சார்பாக செயற்படுகின்றனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க