குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் எந்தவித தீவிவாத செயற்பாடுகளுடனும் தொடர்புபடாத நிலையில் அவரை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது முறையானது அல்ல என குற்றப்புலனாய்வு பிரிவினர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் கடந்த மே மாதம் 27ம் திகதி முதல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததனால் அவர் மீதான தடுப்புக்காவலை இரத்து செய்வது நல்லது என குற்றப்புலனாய்வு பிரிவினர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
அதேவேளை இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே கடந்த 27ம் திகதி குருநாகல் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் பாதுகாப்பு அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க