இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக மட்டத்தில் கொரோனா தொற்று இல்லை என்ற சூழ்நிலையில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்தியிருந்தது. இந்நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த 226 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களைப் பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து பொலன்னறுவைக் கந்தகாட்டில் போதைவஸ்து புனர்வாழ்வு மையத்திற்கு உறவுகளைச் சந்திக்க சென்று வந்தவர்கள் பயணித்த பேருந்தை அடையாளம் காணும் தீவிர முயற்சியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கந்தக்காடு முகாமில் உள்ள உறவுகளைப் பார்வையிட கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று திரும்பியவர்கள் என்ற அடிப்படையில் மூன்று குடும்பங்கள் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டவர்களில் இரு குடும்பங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபை பகுதியிலும் ஒரு குடும்பம் சண்டிலிப்பாய் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று குடும்பங்களும் உறவுகளைப் பார்வையிட்ட பின்பு மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த பேருந்தையும் அதில் பயணித்தவர்களையும் அடையாளம் காணும் முயற்சி நேற்று முதல் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க