பூண்டுலோயாவில் 2 1/2 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட மிருக வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது.
கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா நகரில் 2 1/2 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மிருக வைத்தியசாலை மக்கள் பாவனைக்கு மத்தியமாகாண ஆளுனர் மைத்திரி குணரத்னவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் மத்திய மாகாண ஆளுனர் உட்பட பூண்டுலோயா மிருக வைத்தியசாலை வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பால் கொள்கலன்கள் 10 வழங்கி வைக்கப்பட்டது.
கருத்து தெரிவிக்க