உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றுக்கொண்டதற்கு அமைய மொத்தம் 11 புள்ளிகளைப் பெற்று முன்னேறியுள்ளது.
இதேவேளை, 11 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்த நியூசிலாந்து ஓட்ட சராசரி விகிதத்தின் அடிப்படையில் மூன்றாம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
12 புள்ளிகளை பெற்றுள்ள அவுஸ்ரேலியா முதலிடத்தில் உள்ளதுடன் அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில், 8 புள்ளிகளைப் பெற்றுள்ள இங்கிலாந்து அணி 4ஆம் இடத்தில் உள்ளதுடன், 7 புள்ளிகளை பெற்றுள்ள பங்களாதேஷ் 5ஆம் இடத்திலும் உள்ளது.
கருத்து தெரிவிக்க