உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

தென்னாபிரிக்கா பறக்கிறது இலங்கையின் உயர்மட்ட குழு!

இலங்கையின் உயர்மட்டக் குழுவொன்று அடுத்தமாத இறுதியில் தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் பலப்படுத்துதல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக தொடர்பாடல் பிரிவொன்றை நிறுவுதல் என்பன உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதை மையப்படுத்தியே இவ்விஜயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்னாபிரிக்க ஜனாதிபதி குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தார்.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு செல்லும் வழியில் அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிது நேரம் தரித்துச் சென்றார்.  விமானநிலையத்துக்கு சென்று அவரை வரவேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார்.

இதன்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கைக்குழு, தென்னாபிரிக்கா செல்லவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

 

 

கருத்து தெரிவிக்க