சினிமா

உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் இயக்குனர் மகிழ்திருமேனி!

தடையற தாக்க, மீகாமன் மற்றும் தடம் படங்களின் இயக்குனரான மகிழ்திருமேனி, தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிகராகவும் அறிமுகமாகிறார். இந்நிலையில், இயக்குனர் மகிழ்திருமேனி உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி சேரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தடம் படத்திற்கு பின்னர் மகிழ்திருமேனி இயக்கவுள்ள இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை எனவும், படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் “கண்ணே கலைமானே” படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் “சைக்கோ” , கே. எஸ். அதியமான் இயக்கும் “கண்ணை நம்பாதே” படங்களில் நடித்து வருகிறார், இப்படங்களுக்கு பின்னர் மகிழ்திருமேனியின் படத்தில் இணைகிறார். அது குறித்த முறையான அறிவிப்புகள் விரைவில் வெளிவரவுள்ளது.

கருத்து தெரிவிக்க