மரண தண்டனை தொடர்பாக இலங்கை மேற்கொண்டு வரும் தீர்மானங்களால் வருத்தமடைந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
கனடாவின் கொழும்பு உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
”நாம் எந்த ஒரு குற்றத்திற்கும் மரண தண்டனை விதிப்பதை கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்கின்றோம்.
இவ்வகையான தண்டனைகள் மனித இனத்துக்கு பாதகமாகவும் குற்றங்களில் இருந்து திருத்தவும் முடியாத நிலையினை ஏற்படுத்துகிறது.
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்ப்பதற்கான நடவடிக்கை அவசியமானது என்றாலும், மரணதண்டனை ஒரு சிறந்த தீர்வு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
அத்துடன், மரணதண்டனைகளை மீண்டும் நிறைவேற்றுவது உலகளாவிய ரீதியில் உற்றுநோக்கப்படும் அதேவேளை பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இலங்கை மீது காணப்படும் அமைதி நிலை தொடர்பில் அதிருப்தியை ஏற்படுத்தும்.
எனவே மரண தண்டனை தொடர்பான தடையை தொடர்ந்தும் பேணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதில் உலகெங்கிலும் உள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கையின் நண்பர்களுடன் நாங்கள் இணைகிறோம். என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க