உலகம்

சீனாவில் விசாரணையை தொடங்குகிறது உலக சுகாதார அமைப்பு !

கொரோனா வைரஸ் தொற்றினை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்து , ஆறு மாதங்களின் பின்னர் வைத்திய நிபுணர்களின் குழு வருகின்ற சில நாட்களுக்குள் சீனாவிற்கு சென்று, வைரஸின் தோற்றம் மற்றும் மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது என்பது தொடர்பாக ஆய்வு செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸால் இன்று உலகளவில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் அளித்த செவ்வியில் , சீன ஜனாதிபதியுடனான ஒப்பந்தத்தின் படி, சர்வதேச வல்லுநர்களை  சீனாவுக்கு விரைவில் அனுப்பி , நோய் எவ்வாறு தோன்றியது என்பதை ஆராய உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் , அடுத்த வாரம் சீனாவுக்கு செல்லும் வைத்திய நிபுணர்கள் குழு அங்கு முழுமையான விசாரணையை ஆரம்பிக்க உள்ளனர்.

கருத்து தெரிவிக்க