இலங்கையில் மூன்று முஸ்லிம் அமைப்புக்களை தடைசெய்வதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாதி மிலாது இப்ராஹிம், விலாயத் அஸ் செயானி ஆகிய அமைப்புக்களே தடைசெய்யப்படுகின்றன.
இந்த அமைப்புக்களை தடைசெய்வது தொடர்பான ஜனாதிபதியின் வர்த்தமானி பத்திரங்களை அவைத்தலைவர் லச்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.
இதன்பின்னர் இடம்பெற்ற விவாதங்களின் முடிவில் தடைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி குறித்த தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுபவர்களுக்கு 20 வருட சிறைத்தண்டனையை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க