சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
தற்போதைய நிலவரப்படி , உலகம் முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சம். கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வருகின்றன.
அதனடிப்படையில் , கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் ஜுலை 22 ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 13 248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 134 பேர் குணமடைந்துள்ள அதேவேளை , 29 பேர் பலியாகி உள்ளனர்.
நேபாளத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இதில் பெரும்பாலானோர்க்கு கொரோனா அறிகுறிகள் இல்லை. அந்த நாட்டில் உள்ள 77 மாவட்டங்களில் 75 இல் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது என நேபாள அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க