உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

புதிய செயலாளர்கள் நியமனத்திற்கு வடக்கு ஆளுநர் விளக்கம்

வடமாகாணத்தின் கல்வித்துறையை சீர்திருத்தி தரக்கூடிய போராளியை நான் நேற்று கல்வித்துறையின் செயலாளராக நியமித்துள்ளேன் என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இந்திய துணைத்தூதரகமும், வட. மாகாண கல்வி அமைச்சும் இணைந்து நடத்திய சர்வதேச யோகா தின நிகழ்வு இன்று யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக விளங்கிய இளங்கோவன் நேற்று மாகாண கல்வியமைச்சின் செயலளாராக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகவிருந்த சி.சத்தியசீலனை தனது புதிய செயலாளராக ஆளுநர் நியமித்தார்.

இந்நிலையில் கடந்த 8 வருடமாக ஆளுநரின் செயலாளராக பாரிய பொறுப்புக்களோடு கடமையாற்றியவர்.கல்வித்துறையை சீர்செய்வதற்காக கல்வி அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

நேற்று வழங்கப்பட்ட புதிய செயலாளர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் அவர் அதற்கான விளக்கத்தை வழங்கியுள்ளார்,

கருத்து தெரிவிக்க