அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் இலங்கை பயணம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த தகவலை இன்று அறிக்கையொன்றின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் இந்தோ- பசுபிக் பிராந்தியத்துக்கு வரும், ஜூன் 24ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் முதலில், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, அதன்பின்னரே இலங்கை வரவிருந்தார்.
இந்நிலையிலேயே பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா ஜனாதிபதி டொனால் ட்ரம்புடன், இராஜாங்க செயலர் ஜப்பான செல்வதாலேயே பயணம் இரத்து செய்யப்படுவதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க