இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியா உட்பட வெளிநாட்டு மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் என்று இலங்கை கடற்தொழில் அமைச்சர் ஹரிசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இலங்கை இந்திய மீனவர்களிடையே எல்லைத்தாண்டி மேற்கொள்ளப்படுகின்ற மீன்பிடி நடவடிக்கைகள், இருநாடுகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் குறைந்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றியபோது,
‘சட்டவிரோத எல்லைதாண்டி மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளும் இணைந்து நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து கிரமமான முறையில் குறைந்துள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு மீனவர்களை விடுதலை செய்வதற்கும் அதேபோல வெளிநாடுகளிலுள்ள ஸ்ரீலங்கா மீனவர்களை விடுதலை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இதுவரை ஸ்ரீலங்காவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என்பதை நினைவுபடுத்துகிறேன்.
கருத்து தெரிவிக்க