முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் இதுவரை வெளிச்சவீடுகள் அமைக்கப்படாமையினால் ஆழ்கடலுக்குச்செல்லும் தொழிலாளர்கள் கரைதிரும்புவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 கிலோமீற்றர் நீளமான கரையோரப்பகுதிகளை உள்ளடக்கிய கடற்பிரதேசத்தில் சுமார் 4500 மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் கடற்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முல்லைத்தீவு கரையோரப்பகுதியில் எ;நதஇடத்திலும் இதுவரை வெளிச்சவீடுகள் அமைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுளு;ள கடற்தொழிலாளர்கள்; ஆழ்கடல்;தொழிலுக்குச்சென்று கரை திரும்புவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதகாவும் தெரிவித்துள்;ளனர்.
அதாவது, முள்ளிவாய்க்கால்மாத்தளன், அம்பலவன்பொக்கணை வலைஞர்மடம், ஆகிய பகுதிகளைச்சேர்ந்த கடற்தொழிலாளர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியல் அமைந்துள்ள தொலைதொடர்புகோபுரத்தின் வெளிச்சத்தை அடையாளப்படுத்தியே கரையை அடைவதாக தெரிவிததுள்ளனர்.
இவ்வாறு கரையோரங்களில் வெளிச்சவீடுகள் இன்மையால் தொழிலுக்குசசென்று சிலவேளைகளில் திசைமாறி வேறு கரைகளுக்குச்சென்று பின்னர் தமது துறைகளுக்கு வருவதாகவம் இதனால் அதிக எரிபொருள் செலவினையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
தமக்கு திசை காட்டிகள் வழங்கப்பட்டிருந்தாலும் எல்லா மீனவர்களுக்கும் அவற்றை வைத்து கரைதிரும்ப முடியாது என்று பிரதேச மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கரையோரத்தில் பிரதானமாக அமைக்;கப்;படவேண்டிய வெளிச்சவீடுகள் மற்றும் இடிதாங்கிகள் என்பவற்றை அமைத்துத்தருமாறு கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க