விளையாட்டு செய்திகள்

இங்கிலாந்து அணி – ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்

இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் உலக கிண்ண கிரிக்கட் போட்டி தொடரில் 20-வது நாளான இன்று 24-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இலங்கைநேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் , மேற்கிந்திய அணிகளை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. இதேவேளை பாகிஸ்தானிடம் ஒரு தோல்வியை தழுவி உள்ளது.

குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, அவுஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில்  இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

கருத்து தெரிவிக்க