தேர்தலின் போது வாக்காளர் ஒருவர் வாக்களிக்கும்போது தான் விரும்பிய ஒரு வேட்பாளர் இல்லாத பட்சத்தில் அவர் வாக்களிப்பதற்காக பிரிதொரு பகுதியை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறு வாக்குச் சீட்டில் “ஒருவரும் இல்லை” என்ற பகுதி புதிதாக சேர்க்கப்படவேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையை தற்போதுள்ள இளம் சமுதாயத்தினரிடமிருந்தே முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு முன்வைக்கப்பட்ட யோசனையை ஆணைக்குழு ஒரு கொள்கையாக ஏற்றுக்கொண்ட போதிலும் அதனை நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் ஊடாக அதனை நடைமுறைப்படுத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க