விளையாட்டு செய்திகள்

கோபா கால்பந்து போட்டி: கொலம்பிய அணி, ஆர்ஜன்டீனாவை தோற்கடித்தது.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் கொலம்பியா அணி 2-0 என்ற கோல் அடிப்படையில்; முன்னாள் வெற்றியாளரான அர்ஜென்டினாவை தோற்கடித்தது.

46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிகள் பிரேசில் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன.

இதில் தென்அமெரிக்க கண்டத்தின் 10 அணிகளுடன் ஜப்பான், கட்டார் அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் பங்கேற்றுள்ளன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் 14 முறை வெற்றியாளராக தெரிவான அர்ஜென்டினா அணியை கொலம்பிய அணி தோற்கடித்தது.

கருத்து தெரிவிக்க