பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவிற்குப் பதிலாக சமல் ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கு பதிலளிக்குமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க கூறுகையில், எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ என தெரியவந்துள்ளது.
நிறம், கட்சி பேதமில்லாமல் தாம் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என அக்கட்சியின் பெரும்பாலானவர்கள் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தனர்.
எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக்க வக்கும்புர கூறுகையில், பொதுவான கருத்துக் கணிப்பின் அடிப்படையில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ எனவும் அதைத்தவிர புதிய மாற்றம் குறித்து எதுவும் தெரியவரவில்லையெனவும் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க