பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலைதான் மிகவும் ஆபத்தானது என அந்நாட்டு வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வைத்திய அதிகாரிகள், அந்நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில் , ‘பிரித்தானியாவில் கொரோனாவின் எதிர்கால பரவல் கணிப்பிட இயலாத அளவில் உள்ளது. தற்போதைய சூழலில் கொரோனாவின் இரண்டாம் கட்டப் பரவல் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் எனவும், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டிய தேவை உள்ளது’ என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் அடுத்த மாத தொடக்கத்தில் உணவு விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவை திறக்கப்படும் என கடந்த செவ்வாய் கிழமை , பிரித்தானியா இளவரசர் போரிஸ் ஜோன்சன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இந்த அறிவிப்பை வைத்திய நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க