பாகிஸ்தானில் உள்ள புனிதத் தலங்களுக்கு செல்லும் யாத்திரிகர்களுக்கு கெடுபிடி செய்து வரும் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வருடந்தோறும் ஜூன் 16 ஆம் திகதி பாகிஸ்தானில் ஷாஹிதி ஜோர் மேளா விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியர்களுக்கு விசா அளிப்பதாக இந்தியா-பாகிஸ்தான் இடையே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் இந்த ஆண்டு 87 சீக்கியர்களுக்கு விசா அளிக்க மறுத்துள்ளது.
இதற்கு பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சமய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும்படி வலியுறுத்தி, எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் பக்தர்களுக்கு விசா வழங்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க