ஹவுத்தி படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சவுதியைச் சேர்ந்த 26 பேர் படுகாயமடைந்தனர்.
சவுதயில் உள்ள அபா விமானநிலையத்தைக் குறிவைத்து ஹவுத்திப் படையினர் நேற்று காலையில் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலில் 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏமன் நாட்டு எல்லையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அதனைத் முறியடித்து உள்ளதாகவும் சவுதி தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
சவுதி அரேபிய படையினர் ஏமன் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு ஹவுத்தி இயக்கம் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. இந்நிலையிலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க