வடகிழக்கு சீனாவின் ஜீலின் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த நிலக்கரி சுரங்கத்தை அண்மித்த பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட நில அதிர்வில் சுரங்கத்தில் வெடிப்பு ஏற்பட்டு இவ்விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அப்பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க