தெரிவுக்குழு மீண்டும் கூடுமாக இருந்தால் அது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பலமற்றதாக மாற்றும் செயற்பாடு என சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவினர் கூறும் தகவல்கள் ஊடகங்களுக்கு நேரடியாக தெரிவிப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை சபாநாயகர் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க உளவு பிரிவு அதிகாரிகள் விஷேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்ததாகவும் அதனை ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்ததா? எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
கருத்து தெரிவிக்க