மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு விமானம் தரையிறங்கியதாக விமான நிலைய ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இந்த விமானம் ஜொகனஸ்பேர்கில் இருந்து நேற்று இரவு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு ஓய்வு அளிப்பது மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த விமானம் தரையிறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, அஜர்பைஜானில் இருந்து வந்த சிறப்பு விமானம் ஒன்றும் மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல் ஒன்றுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க மூன்று பொறியாளர்களை அழைத்துக்கொண்டு குறித்த விமானம் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அனைத்து பயணிகள் மற்றும் குழு உறுப்பினர்களுக்கும் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை சுகாதார அதிகாரிகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி பயணிகளின் வருகை செயல்முறைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க