ஈரானை எச்சரிக்கும் வகையில் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா போர்க்கப்பல்களை குவித்து வரும் நிலையில் அவை ஈரானில் இருந்து ஏவுகணைகளை செலுத்தும் தூரத்திலேயே இருப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.
மேலும், இவ்வாறு தாக்குதல் நடத்தினால் எண்ணெய்
ஒரு பீப்பாய் விலை 100 அமெரிக்க டொலர்களாக உயரும் எனவும் இதனால் அமெரிக்கா ,ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தினால் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையே மோதல் எழுந்துள்ளதை தொடர்ந்து அமெரிக்கா,மத்திய கிழக்கு பகுதியில் போர் கப்பல்களை குவித்து வரும் நிலையில் அவ்விரு நாடுகளுக்கிடையே போர் நடக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
கருத்து தெரிவிக்க