உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 137 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 29.2 ஓவர்கள் நிறைவில் 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணியின் சார்பில், அணித் தலைவர் திமுத் கருணாரத்ன அதிக பட்சமாக 52 ஓட்டங்களையும், குசல் பெரெரா 29 ஓட்டங்களையும் திசர பெரெரா 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மட் ஹென்ரி மற்றும் ஃப்குஷன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
நியூசிலாந்து அணி 137 என்ற வெற்றி இலக்கை 16.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி வெற்றியை பதிவு செய்தது.
நியூசிலாந்து அணியின் சார்பில், துடுப்பெடுத்தாடிய மாடீன் கப்டில் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களையும் கொலின் முன்ரொ 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
கருத்து தெரிவிக்க