உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாட்டின் பாதுகாப்பு நிலை: சிவில் சமூகத்தினர் ரணிலுடன் சந்திப்பு

சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் இன்று பிரதமரை சந்தித்தனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.


இதன்போது நாட்டின் அரசியல் மற்றும் நிறுவகப் பொறுப்புக்கூறல் தொடர்பில் பிரதிநிதிகள் பிரதமரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பிரதமர் இதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தக்குழு ஊடகங்களுக்கு கருத்துக்கூறக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


வண. தம்பல அமில தேரர், விக்கிரமபாகு கருணாரட்ன, பாக்கியசோதி சரவணமுத்து, ஜெஹான் பெரேரா, பேராசிரியர் சந்திரகுப் தேனுவர, சமன் தேசப்பிரிய, ராஜா உஸ்வெட்கேயியாவ உள்ளிட்டவர்கள் சமூக அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

கருத்து தெரிவிக்க