நேற்று (பெப்ரவரி 26) அவிசாவளை – கொழும்பு வீதியிலுள்ள எஸ்வத்த பாலத்திற்கருகில் செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று வீதியில் குடைசாய்ந்து எதிர்திசையில் பயணித்த லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் படுகாயமடைந்த புவக்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளாரெனவும் சந்தேகத்தின் பேரில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க