எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொண்ட இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதன் காரணமாக குறித்த பகுதியில் கத்திக்குத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியுடன் எகொடஉயன பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க