இன்று (ஜனவரி 30) காலி கொஸ்கொட மஹா இந்துருவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரு நபர்கள் வீட்டின் முன்னிருந்த நபரொருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட குறித்த துப்பாக்கி செயல்படாததால் உயிர் சேதமோ பொருட்கள் சேதமோ ஏற்படவில்லையெனவும் துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க