34 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான காணியொன்றை வாங்கியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வனான யோஷித ராஜபக்ஷ சந்தேக நபராக பெயரிடப்பட்டு கடந்த ஜனவரி 25ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பெலியத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அதற்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷ இன்று (ஜனவரி 27) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க