தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக இன்று (ஜனவரி 20) 49 பயணிகளுடன் மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து சேருநுவர கல்லாறு இராணுவ முகாமிற்கு முன்பாகவுள்ள வளைவுக்கு அருகில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த 49 பயணிகளில் 14 பேர் காயமடைந்த நிலையில் சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் அவர்களுள் 09 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க