புதியவைவணிக செய்திகள்

வாழைச்சேனை காகித தொழிற்சாலையை மீண்டும் திறக்க தீர்மானம்

கடந்த ஆண்டு (2024) பெப்ரவரி மாதம் தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு வாழைச்சேனை காகித தொழிற்சாலையை மூடுவதற்கு பதிலாக பழுதடைந்த இயந்திரங்களை சரி செய்வதற்கான வேலைகளை முன்னெடுக்கத் தீர்மானித்தது.

அதற்கிணங்க வாழைச்சேனை காகித தொழிற்சாலையில் பழுதடைந்த இயந்திரங்கள் சரிசெய்யப்பட்ட பின்னர் அதன் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க